Thursday 17 November 2016

வாழைப்பூ கட்லெட்


தேவையானவை: வறுத்த அரிசி மாவு, நறுக்கிய வெங்காயம் - தலா 1/4 கப், வேகவைத்த வாழைப்பூ, வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு -  தலா 1 கப், இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த் தூள் - தலா 1 டீஸ்பூன், கரம் மசாலா, மல்லித் தூள் -  தலா 1/2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - 1/2 கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, வாழைப்பூவை ஒன்றன்பின் ஒன்றாக வதக்க வேண்டும். பின்னர், மிளகாய்த் தூள், மல்லித் தூள், உருளைக்கிழங்கைச் சேர்த்துக் கிளறி, கரம் மசாலா, உப்பு, கொத்தமல்லி சேர்த்து, கெட்டியான பதத்துக்குக் கிளற வேண்டும். அரிசிமாவை உடன் சேர்த்து கிளறி உருண்டை பிடித்து, உலர்ந்த அரிசி மாவில் தோய்த்து, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுத்துப் பரிமாறவும்.

பலன்கள்: பித்த நோய் குணமாகும். ரத்தம் விருத்தியாகும். உடலுக்கு வலு சேர்க்கும். 

No comments:

Post a Comment