Thursday 17 November 2016

வாழைப்பூ ராகி ரொட்டி


தேவையானவை: வேகவைத்த வாழைப்பூ, ராகி மாவு - தலா 1 கப், நறுக்கிய வெங்காயம் - 1/2 கப், கறிவேப்பிலை - ஒரு கொத்து, கொத்தமல்லி - 1/4 கப், சீரகம், இஞ்சித் துருவல் - தலா 1 டீஸ்பூன், நறுக்கிய பச்சைமிளகாய் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாழைப்பூ, ராகி மாவு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, சீரகம், இஞ்சி, பச்சைமிளகாய், உப்பு  அனைத்தையும் நீருடன் ஒன்றாகச் சேர்த்து, சப்பாத்தி மாவைவிட சற்றுக் குழைவாகப் பிசைய வேண்டும். ரொட்டிபோல தட்டி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, இருபுறமும் வேகவைக்க, வாழைப்பூ ராகி ரொட்டி ரெடி.

பலன்கள்: உடலுக்குச் சக்தி அளிக்கும். ராகியுடன் வாழைப்பூ சேரும்போது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் நிறைவாகக் கிடைக்கும். நன்கு பசி தாங்கும். செரிமானம் மேம்படும். வயிற்றுக் கோளாறுகளைச் சரிசெய்யும்.

No comments:

Post a Comment