Saturday 24 September 2016

இறால் பொடி

இறால் பொடி

இறால் பொடி

 

தேவையானவை:

 

இறால் கருவாடு

 

(சிறியது)  250 கிராம்

 

காய்ந்த மிளகாய்  10

 

இரண்டாக நறுக்கிய சின்னவெங்காயம்  7

 

பூண்டு  8 பல்

 

சீரகம்  அரை டீஸ்பூன்

 

தேங்காய்த்துருவல்  200 கிராம்

 

புளி  சிறிய எலுமிச்சை அளவு

 

எண்ணெய்  4 டேபிள்ஸ்பூன்

 

உப்பு  தேவையான அளவு

 

செய்முறை:

 

கருவாட்டை நன்கு தண்ணீரில் அலசி, உலர வைத்துக்கொள்ளவும். வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு அடுப்பைக் குறைத்து வைத்து கருவாட்டைச் சேர்த்து மொறுமொறுப்பாக வரும்வரை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பிறகு, மற்றொரு வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயை சேர்த்து வறுத்து தனியே எடுத்துவைக்கவும். அதே வாணலியில் சீரகம் சேர்த்துப் பொரிந்ததும், சின்னவெங்காயம், பூண்டு, புளி சேர்த்து நன்கு வதங்கியதும் தேங்காய்த்துருவல் சேர்த்து தீயைக் குறைத்து வைத்து, பொன்னிறமாக வரும் வரை கலவையை வறுக்கவும். இதை கருவாடு, காய்ந்த மிளகாயுடன் ஒன்றாகக் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து ஆற வைத்து மிக்ஸியில் அரைக்கவும். இந்த இறால் பொடி சாதம், இட்லி, தோசை எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

 

குறிப்பு:

 

கருவாட்டில் உப்பு இருப்பதால், பொடிக்கு அரைக்கும் போது உப்பு சரிபார்த்துவிட்டு சேர்க்கவும்.

No comments:

Post a Comment