Sunday 8 January 2017

அவித்த முட்டை பிரை செய்வது எப்படி

தேவையான பொருட்கள் :
முட்டை - 4
பச்சைமிளகாய் - 1 டீஸ்பூன்
புதினா -   சிறிதளவு
மஞ்சள்தூள்அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - 1 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
செய்முறை :
* கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். .மிளகாயை பேஸ்ட் செய்தும் போடலாம்.
* முட்டையை வேக வைத்து ஓட்டை உடைத்து கத்தியால் முட்டையை சற்று கீறி கொள்ளவும். அப்போது தான் மசாலா உள்ளே போகும்.
* அடுப்பில் நான் - ஸ்டிக் பேனை வைத்து 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பச்சைமிளகாய்/பேஸ்ட்டை சேர்த்து வதக்கவும்.
* மிளகாயின் பச்சை வாசனை போனதும் புதினாவைச் சேர்த்து ஒரு பிரட்டு புரட்டவும்.
* இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு மற்றும் மிளகுத்தூளைச் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கலக்கவும்.
* பொடிகளின் பச்சை வாசனை போனதும் வேக வைத்த முட்டையைச் சேர்த்து கிளறவும்.
* முட்டையில் மசால் ஏறிவிட்டதா என்று உறுதி செய்துவிட்டு அடுப்பை அணைத்து பரிமாறவும்.
* சூப்பரான செட்டிநாடு அவித்த முட்டை பிரை ரெடி.
குறிப்பு :
பச்சைமிளகாயை பேஸ்ட்டாககூட உபயோகிக்கலாம்.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday 7 January 2017

தேங்காய்ப் பாயசம்

தேங்காய்ப் பாயசம்
தேவையானவை:
 மெல்லிய நீளமாக நறுக்கிய
தேங்காய் - முக்கால் கப்
 பச்சரிசி - 3 டேபிள்ஸ்பூன்
 வெல்லம் - முக்கால் கப் (தேவைக்கேற்ப சரிசெய்து கொள்ளவும்)
 ஏலக்காய் - 1 (தூளாக்கவும்)
 முந்திரி - 10
 காய்ச்சிய பால் - கால் கப்
 நெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
அரிசியை அரைமணி நேரம் ஊறவைக்கவும். பிறகு மிக்ஸியில் தேங்காயோடு சேர்த்து கால் கப் தண்ணீர் விட்டு அரைத்து பேஸ்டாக்கவும். அரைத்தவற்றோடு 2 கப் நீர் விட்டு கலந்து, அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். தீயை மிதமாக்கி 10 முதல் 12 நிமிடங்கள் வேகவிடவும். இடையிடையே கிளறிவிடவும். இல்லையென்றால் அடி பிடித்துக்கொள்ளும். அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து கால் கப் தண்ணீர் விட்டு வெல்லத்தை கலந்து கரையவிடவும். பிறகு வடிகட்டி கொள்ளவும். அதிகமாக தண்ணீர் விடாமல், குறைவாக விடவும். அரிசி வெந்து கஞ்சி பதத்துக்கு வந்ததும் வடிகட்டிய வெல்லக்கரைசல், ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறவும். எல்லாம் சேர்ந்து வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும். அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து நெய் விட்டு சூடானதும் முந்திரியை நன்கு வறுத்து பாயசத்தில் சேர்க்கவும். இறுதியாக பாலை விட்டு ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்து பிறகு இறக்கி சூடாகப் பரிமாறவும்.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கோதுமை ரவை ஸ்வீட் பொங்கல்

கோதுமை ரவை ஸ்வீட் பொங்கல்
தேவையானவை:
கோதுமை ரவை - அரை கப்
 வெல்லம் - அரை கப்
 பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
 உப்பு - ஒரு சிட்டிகை
 ஏலக்காய் - 1 (பவுடராக்கவும்)
 தண்ணீர் - ஒன்றரை கப் + கால் கப்
 நெய் - 2 டீஸ்பூன் + சிறிது
 முந்திரி - சிறிதளவு

செய்முறை:
அடுப்பில் பாத்திரத்தை வைத்து ஒரு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரியை நிறம் மாற வறுத்தெடுத்து தனியாக வைக்கவும். அதே பாத்திரத்தில் ரவையைச் சேர்த்து வறுத்தெடுக்கவும். பிறகு, அதே பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி, வறுத்த ரவை, பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து மூடிப்போட்டு மிதமான தீயில் வேகவிடவும். மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து கால் கப் தண்ணீர், வெல்லம் சேர்த்து கரையவிட்டு, அப்படியே வெந்து கொண்டிருக்கும் ரவை கலவையில் கலக்கவும். வெல்லக்கரைசலை ரவை உறிஞ்சியதும், 1 டீஸ்பூன் நெய் விட்டு கலக்கவும். பொங்கலில் இருந்து நெய் வெளிவர ஆரம்பிக்கும்போது நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் கலந்து கிளறி இறக்கி பரிமாறவும்.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஸ்வீட் போளி ரெசிப்பி

ஸ்வீட் போளி ரெசிப்பி
தேவையானவை:
 சீனிக்கிழங்கு - 3
 வெல்லம் - 1 கப்
 துருவியத் தேங்காய் - கால் கப்
 ஏலக்காய் - 1 (பவுடராக்கவும்)
மாவு பிசைய:
 மைதா மாவு - 1 கப்
 மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை (விருப்பப்பட்டால்)
 நெய்/எண்ணெய் - கால் கப்
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மாவு பிசைவதற்கு கொடுத்துள்ளவற்றைச் சேர்த்து போதுமான தண்ணீர் விட்டு பிசையவும். போளி செய்வதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பாக மாவைப் பிசைந்துவிட வேண்டும். மாவை மிருதுவாக பிசைந்து 4 மணி நேரம் ஊறவிடவும்.மாவு ஊறிக்கொண்டிருக்கும் நேரத்தில் பூரணத்தை ரெடி செய்துவிடலாம். சீனிக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் வைத்து, பிறகு சிறிது தண்ணீர் நிரப்பிய பிரஷர் குக்கரில் சீனிக்கிழங்கு இருக்கும் பாத்திரத்தைத் வைத்து, ஐந்து விசில் வரை விட்டு ஆவியில் வேக விட்டெடுக்கவும். ஆறியதும் கிழங்கின் தோல் நீக்கி மசித்து வைக்கவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து, வடிகட்டி வைக்கவும். பிறகு அப்படியே கிழங்கில் சேர்த்து, மிதமான தீயில் அடுப்பில் வைத்து வேகவிடவும். இரண்டும் ஒன்றாக கலந்ததும் துருவியத் தேங்காய், ஏலக்காய்த்தூளைச் சேர்த்து எல்லாம் ஒன்று சேர்ந்து வரும்வரை கிளறவும். ஒட்டாத பதம் வரும்போது அடுப்பை அணைத்து ஆறவிடவும். பிறகு, விருப்பமான அளவில் உருண்டைகளாகப் பூரணத்தை உருட்டிக்கொள்ளவும். இப்போது பிசைந்து வைத்திருக்கும் மாவில் இருந்து நெய் பிரிந்து வெளியே வரும். மீண்டும் மாவைப் பிசைந்து ஒரே மாதிரியான சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். உருட்டிய உருண்டைகளை மாவு தொட்டு தேய்த்து, நடுவில் பூரணத்தை வைத்து மூடி, மீண்டும் போளி வடிவத்துக்கு தேய்த்து வைக்கவும். தேய்த்த மாவில் இருந்து எண்ணெய்/நெய் வெளிவர ஆரம்பிக்கும் என்பதால் போளி சுட நெய்/எண்ணெய் தேவையில்லை. ஆனாலும் நெய்/எண்ணெய் வேண்டும் என்று நினைப்பவர்கள் சிறிது எண்ணெய்/நெய் சூடான தவாவில் தடவி தீயை மிதமாக்கி போளியை இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். போளியை தோசை கரண்டியால் மெதுவாக அழுத்திவிட்டால் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றும்.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அக்கார அடிசில்

அக்கார அடிசில்
தேவையானவை:
பச்சரிசி - அரை கப்
 பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
 பால் - 2 + 1 கப்
 தண்ணீர் - அரை கப்
 வெல்லம் - அரை கப்
 சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
 நெய் - கால் கப் + 1 டேபிள்ஸ்பூன்
 ஏலக்காய் - 1
 முந்திரி - 6
 குங்குமப்பூ - 3 நரம்பு

செய்முறை:
குங்குமப்பூவை ஒரு டேபிள்ஸ்பூன் பாலில் ஊறவிடவும். குக்கரை அடுப்பில் வைத்து 1 டேபிள்ஸ்பூன் நெய்விட்டு முந்திரியை உடைத்து சேர்த்து பொன்னிறமாக வறுத்தெடுத்து தனியாக வைக்கவும். அதே குக்கரில் அரிசி, பருப்பை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து மிதமான தீயில் வறுத்து பிறகு பால், தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்ததும் மூடிப்போட்டு மூன்று விசில் வரை வேகவிடவும். குக்கரின் உள்ளே ஒரு பாத்திரத்தை வைத்து அதில் சமைப்பதாக இருந்தால் ஐந்து விசில் வரை வேகவிடவும். அரிசி-பருப்பு நன்கு வெந்ததும் மசித்து விடவும். இத்துடன் மீதமிருக்கும் 1 கப் காய்ச்சிய பாலைச் சேர்த்து மசித்து, அடுப்பில் வைத்து வேகவிடவும். பிறகு, 2 டேபிள்ஸ்பூன் நெய், தூளாக்கிய வெல்லம் சேர்த்து வெல்லம் கரைய கலக்கவும்.மேலும் 2 டேபிள்ஸ்பூன் நெய், சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளறவும். தீயை மிதமாக்கிக் கொள்ளவும். 4 நிமிடங்கள் வரை கிளறி, குங்குமப்பூ ஊறிய பாலை குங்குமப்பூவோடு சேர்த்து,மேலும் 2 டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி கிளறிவிடவும்.இரண்டு நிமிடங்கள் கைவிடாமல் கிளறி, இறுதியாக 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஏழு கறி கூட்டு

ஏழு கறி கூட்டு
தேவையானவை:
 பாசிப்பருப்பு - கால் கப்
 வாழைக்காய் - ஒன்றில் பாதி
 மஞ்சள் பூசணிக்காய் - ஒரு சிறு துண்டு
 சர்க்கரை வள்ளிக்கிழங்கு - ஒன்றில் பாதி
 ஃப்ரெஷ்ஷான மொச்சை -
கால் கப்
 அவரைக்காய் - 15
 கருணைக்கிழங்கு - ஒரு சிறிய துண்டு
 சேப்பங்கிழங்கு - 2
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

அரைக்க:
 துருவிய தேங்காய் - அரை கப்
 சீரகம் - அரை டீஸ்பூன்
 பச்சை மிளகாய் - 5
 அரிசி மாவு - கால் டீஸ்பூன்

தாளிக்க:
 எண்ணெய் - 2 டீஸ்பூன்
 கடுகு - 1 டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:
அடுப்பில் குக்கரை வைத்து பாசிப்பருப்பைச் சேர்த்து தண்ணீர் ஊற்றி 2 விசில் வரை விட்டு வேகவிடவும். கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றின் தோலை நீக்கி விடவும். பிறகு, கழுவி சின்ன சின்ன சதுரங்களாக நறுக்கி வைக்கவும். அவரைக்காயை பொடியாக நறுக்கி வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து வேகவிடவும். இத்துடன் மொச்சை, மஞ்சள்தூள், உப்பு, தோல் நீக்கி நறுக்கிய வாழைக்காய் மற்றும் மஞ்சள் பூசணியைச் சேர்த்து காய்களை வேகவிடவும்.அரைக்கக் கொடுத்தவற்றை தண்ணீர் விட்டு மிருதுவாக அரைத்தெடுக்கவும். காய்கள் வெந்ததும், வெந்த பருப்பு மற்றும் தேங்காய் கலவையைச் சேர்த்து வேகவிடவும். பிறகு தாளிக்க வேண்டியதைச் சேர்த்து தாளித்து காய்களில் கொட்டி கிளறி இறக்கி பரிமாறவும்.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கல்கண்டு பொங்கல்

கல்கண்டு பொங்கல்
தேவையானவை:
 பச்சரிசி - அரை கப்
 பாசிப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
 சர்க்கரை + கல்கண்டு - முக்கால் கப்
 நெய்/வெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
 காய்ச்சிய பால் - கால் கப்
 ஏலக்காய் - 1 (பவுடராக்கவும்)
 உலர்திராட்சை (கிஸ்மிஸ்) - 1 டேபிள்ஸ்பூன் (தேவைப்பட்டால்)
 முந்திரி - 5
 பச்சைக் கற்பூரம் - கடுகளவு
 குங்குமப்பூ - 5 நரம்பு
 உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:
சர்க்கரை மற்றும் கல்கண்டைப் பொடித்து தனியாக வைக்கவும். பொங்கலைச் சுவைக்கும்போது கல்கண்டை சுவைப்பது சிலருக்குப் பிடிக்காது. பிடிப்பவர்கள் முழுதாகவே கல்கண்டை சேர்க்கலாம். குங்குமப்பூவை சிறிது பாலில் ஊற விடவும்.குக்கரை அடுப்பில் வைத்து சிறிதளவு நெய்/வெண்ணெய் விட்டு பாசிப்பருப்பைச் சேர்த்து வாசம் வரும்வரை வறுத்துக் கொள்ளவும். பிறகு, குக்கரில் அரிசியோடு சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி, மூடிப்போட்டு 4 விசில் வரை வேகவிட்டு, நன்கு மசித்து வைக்கவும்இத்துடன் பால் சேர்த்து வேகவிட்டுப் பொடித்த சர்க்கரை-கல்கண்டு கலவை, பச்சைக் கற்பூரம், உப்பு, பாலில் ஊறிய குங்குமப்பூ சேர்த்து கிளறவும். தேவையான அளவு நெய்விட்டு மிதமான தீயில் 8 நிமிடம் கிளறவும். இறுதியாக நெய்யில் வறுத்த முந்திரி, உலர்திராட்சை (கிஸ்மிஸ்), ஏலக்காய் சேர்த்து கிளறி, இறக்கி பரிமாறவும்.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வெள்ளைப் பொங்கல் / பால் பொங்கல்

வெள்ளைப் பொங்கல் / பால் பொங்கல்
தேவையானவை:
 பச்சரிசி - அரை கப்
 பால் - முக்கால் கப்
 தண்ணீர் - இரண்டரை அல்லது 3 கப்
 உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:
பால் மற்றும் தண்ணீரை அடிகனமான பாத்திரத்தில் சேர்த்து, அடுப்பில் வைத்து காய்ச்சவும். அரிசியைக் கழுவி பாலோடு சேர்த்து வேகவிடவும். தீயை மிதமாக்கவும். அரிசி நன்கு மிருதுவாக வெந்ததும், கரண்டியால் நன்கு மசித்துவிடவும். இந்தப் பதத்தில் உப்பைச் சேர்த்து தொடர்ந்து கிளறவும். இல்லையென்றால் அடி பிடித்துவிடும். பிறகு பரிமாறினால் சுவை அள்ளும்.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE