Wednesday 28 September 2016

சுட்ட கோழி (சிக்கன் பார்பிக்யு)

சுட்ட கோழி (சிக்கன் பார்பிக்யு)

சுட்ட கோழி (சிக்கன் பார்பிக்யு)

 

தேவையானவை:

 கோழிக்கறி - ஒன்றரை கிலோ

(லெக்பீஸ் கிடைத்தால் நல்லது)

 வெண்ணெய் - 100 கிராம்

 

மசாலா செய்ய:

 கெட்டித்தயிர் - 100 மில்லி

 இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

 பச்சை மிளகாய் - 3

 மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

 மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன்

 மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

 கரம்மசாலாத் தூள் - 2 டீஸ்பூன்

 சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

 மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

 பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு

 உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

கோழிக்கறியைக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு பவுலில் மசாலா செய்ய கொடுத்துள்ள பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்துக்கு கலந்து கொள்ளவும். சுத்தம் செய்த கோழிக்கறியில் மசாலாவைக் கலந்து மூன்று மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். பிறகு பிரிட்ஜில் இருந்து, பார்பிக்யு அடுப்பில்  வைத்து 45 நிமிடம் கிரில் செய்யவும். அவ்வப்போது கறியின் மீது வெண்ணெய் தடவவும். மேலும் எல்லா பகுதிகளும் வேகுமாறு திருப்பி விடவும். கோழி வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கிப் பரிமாறவும்.

No comments:

Post a Comment