Sunday 2 October 2016

கோழிப்புக்கை

கோழிப்புக்கை

கோழிப்புக்கை

 

இலங்கை, யாழ்பாணத்தில் பச்சரிசியில் செய்யும் சாதத்தைக் குழைய சமைத்து எடுத்தால், 'புக்கை' என்பார்கள். அதனால், கோழி சேர்த்து செய்யப்படும். இந்த சாதத்தை 'கோழிப்புக்கை' என்று சொல்கிறார்கள்.

 

தேவையானவை:

 

கோழி (வைரமாக இருந்தால் நல்லது. 'வெடைக் கோழி'யை வைரம் என்று அங்கு அழைப்பார்கள்)- 1 கிலோ

பச்சரிசி - 1 கிலோ

சின்னவெங்காயம் - 250 கிராம்

பச்சை மிளகாய் - 4

தேங்காய் - அரை மூடி

எலுமிச்சைப் பழம் - 1

மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

 

வெங்காயத்தைத் தோல் உரித்து இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கோழிக்கறியைப் பெரிய துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து, எடுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கி வைக்கவும். தேங்காயைத் துருவி தேங்காய்ப்பால் பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். எலுமிச்சைப்பழத்தை நறுக்கி சாறு பிழிந்து வைத்துக் கொள்ளவும். ஒரு பெரிய பாத்திரத்தில் 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். கொதிக்கும் தண்ணீரில் சுத்தம் செய்த கோழியைப் போட்டு உப்பு சேர்த்து 20 நிமிடம் வேக வைக்கவும். பிறகு, வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்க்கவும்.

10 நிமிடங்கள் கழித்து, அரிசியைப் போட்டு தீயின் அளவைக் குறைத்து வைக்கவும். அடிக்கடி கிளறி விடவும். அரிசி அரைப்பதம் வெந்த பின்னர் மிளகாய்த்தூளைச் சேர்த்துக் கிளறி விடவும். 5 நிமிடங்கள் கழித்து தேங்காய்ப்பாலைச் சேர்க்கவும். 10 நிமிடங்கள் கழித்து அரிசி நன்கு வெந்து தண்ணீர் வற்றி கெட்டியானதும் இறக்கி வைத்து விடவும். 10 நிமிடங்களுக்குப் பிறகு எலுமிச்சைச்சாற்றை ஊற்றிக் கிளறி விடவும். சுவையான கோழிப்புக்கை தயார்.

No comments:

Post a Comment