Thursday 17 November 2016

வாழைக்காய் சுகியன்


தேவையானவை: வேகவைத்த வாழைக்காய் - 1, கோதுமை மாவு - 1/2 கப், அரிசி மாவு, தேங்காய்த் துருவல், வெல்லம் - தலா 1/4 கப், நெய் - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய், ஏலக்காய்த் தூள் - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் நெய் ஊற்றி, தோல் நீக்கி மசித்த வாழைக்காய், வெல்லம், தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கிய பின், ஏலக்காய்த் தூள் சேர்த்து, நன்றாகக் கிளறி ஆறவிடவும். பின், சிறு உருண்டைகளாக பிடிக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, உப்பு, தண்ணீர் சேர்த்து, பஜ்ஜி மாவுப் பதத்துக்குப் பிசைந்து, உருண்டைகளை மாவில் முக்கி எடுத்து, எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.

பலன்கள்: உடல் உறுதி அதிகரிக்கும். வயிற்றுப் புண்கள் குணமடையும்.  எப்போதாவது அளவாகச் சாப்பிடலாம்.

No comments:

Post a Comment