Friday 18 November 2016

மாதுளை - ரோஜா இதழ் ஸ்மூத்தி


தேவையானவை: மாதுளை முத்துகள் - 1 கப், பன்னீர் ரோஜா இதழ்கள் - 2  டேபிள்ஸ்பூன், தேன் - 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: மாதுளையுடன் சிறிதளவு நீர்விட்டு, ரோஜா இதழ் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்ட வேண்டும். இதனுடன், தேன் கலந்து, சிறிது ரோஜா இதழ்களைத் தூவிப் பரிமாறலாம்.

பலன்கள்: மாதுளையில் வைட்டமின் பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து உள்ளன. பித்தம், குடல்புண், தொண்டை வறட்சி, புளித்த ஏப்பம், வாந்தி, உடல் சோர்வு ஆகியவற்றைப் போக்கும். எலும்புகள், பற்களை உறுதிப்படுத்தும். பன்னீர் ரோஜா இதழ்கள் தாகம், வெள்ளைப்படுதல் ஆகியவற்றைக் குணமாக்கும். இது மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. மாதுளை விதைகள் ரத்தத்தைப் பெருக்கும். இதயத்துக்கு வலுவூட்டும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

No comments:

Post a Comment