Friday 18 November 2016

மிக்ஸட் ஃப்ரூட் ஸ்மூத்தி



தேவையானவை: மாதுளை முத்துக்கள், நறுக்கிய ஆப்பிள் - தலா 1/2 கப், சப்ஜா விதை - 1/2 டீஸ்பூன், பனங்கற்கண்டு -  தேவையான அளவு, விதை நீக்கி, நறுக்கிய தர்பூசணி - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: மாதுளை முத்துக்கள், ஆப்பிளை மிக்ஸியில் சிறிது நீர்விட்டு அரைத்து, வடிகட்ட வேண்டும். ஒரு பாத்திரத்தில், பனங்கற்கண்டைக் கரைத்து, அதில், ஊறிய சப்ஜா விதை, தர்பூசணி சேர்த்து, அதனுடன் வடிகட்டிய பழக்கரைசலைக் கலந்து பரிமாறலாம்.

பலன்கள்: மாதுளையில் உள்ள சத்துக்கள் குடல்புண், தொண்டை வறட்சி, புளித்த ஏப்பம், வாந்தி, உடல் சோர்வு ஆகியவற்றைப் போக்கும். சப்ஜா விதை,  செரிமானப் பாதையில் ஏற்படும் புண்களை ஆற்றும். ஆப்பிளில் நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம் நிறைவாக உள்ளது. இது இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கும்.

No comments:

Post a Comment