Friday 18 November 2016

தக்காளி ஸ்மூத்தி


தேவையானவை: பழுத்த தக்காளி - 3, வெள்ளை மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன், நாட்டுச்சர்க்கரை - தேவையான அளவு, உப்பு - 1 சிட்டிகை, கறுப்புத் திராட்சை - 6.

செய்முறை: தக்காளியுடன் சிறிது உப்பு சேர்த்து மிக்ஸியில் அடித்து வடிகட்ட வேண்டும். இதில் வெள்ளை மிளகுத்தூள், நாட்டுச்சர்க்கரை போட்டுக் கரைத்து, இரண்டாக நறுக்கிய கறுப்புத் திராட்சைகளைத் தூவிப் பரிமாறவும்.

பலன்கள்: வைட்டமின் ஏ, பி, கே, ஃபோலேட், கால்சியம், பாஸ்பரஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன. ரத்தத்தைச் சுத்தப்படுத்தி, ரத்தசோகையைக் குணமாக்கும். மலச்சிக்கலைப் போக்கும். செரிமானத்தை மேம்படுத்தும். இதில் உள்ள லைக்கோபீன் சத்து இதயத்தை பலப்படுத்தும், புற்றுநோயைத் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

No comments:

Post a Comment