Sunday 20 November 2016

தாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | பால்சுறா குழம்பு

தாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | பால்சுறா குழம்பு

தேவையானவை:

 பால் சுறா - 250 கிராம்

 தேங்காய் - அரை மூடி (துருவிக்கொள்ளவும்)

 புளி - ஒரு சிறிய உருண்டை (இந்த குழம்புக்கு  புளி அதிகம் தேவையில்லை)

 பூண்டு - 4 பல் (தட்டிக் கொள்ளவும்)

 சீரகம் - 2 டீஸ்பூன்

 மிளகு - ஒரு டீஸ்பூன்

 மல்லி (தனியா) - 2 டீஸ்பூன்

 சுக்கு - ஒரு சிறிய துண்டு

(அம்மியில் வைத்துத் தட்டவும்)

 காய்ந்த மிளகாய் - ஒன்று  

 கடுகு - ஒரு டீஸ்பூன்

 வெந்தயம் - ஒரு டீஸ்பூன்

 மஞ்சள்தூள் - 2 சிட்டிகை

 கறிவேப்பிலை - சிறிது

 நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புளியை கால் கப் தண்ணீரில் ஊறவைக்கவும். பால் சுறாவை சிறு துண்டுகளாக நறுக்கி கழுவிக் கொள்ளவும். பூண்டைத் தட்டிக்கொள்ளவும். தேங்காய்த் துருவலுடன் மிளகு, சீரகம், மல்லி (தனியா), தட்டிய சுக்கு, காய்ந்த மிளகாய் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு தாளித்து, கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்து வதக்கவும். தட்டிய பூண்டைச் சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்த மசாலா, தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர், புளிக்கரைசல் சேர்த்து பச்சை வாடை போகும்வரை நன்கு கொதிக்கவிடவும்நன்றாகக் கொதித்ததும் பால் சுறாவைச் சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும். அதிகம் கிளற வேண்டாம். 5 நிமிடங்கள் கழித்து அடுப்பிலிருந்து இறக்கிப் பரிமாறவும்.

 

No comments:

Post a Comment