Sunday 20 November 2016

தாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | பச்சை மருந்துப்பொடி

தாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | பச்சை மருந்துப்பொடி

தேவையானவை:

 சுக்கு - 100 கிராம்

 மிளகு - 25 கிராம்

 திப்பிலி - 10 கிராம்

 நறுக்கு மூலம் - 25 கிராம்

 ஓமம் - 50 கிராம்

 கருஞ்சீரகம் - 25 கிராம்

 பெருங்காயம் - ஒரு புளியங்கொட்டை அளவு

 கடுகு - 50 கிராம்

 சீரகம் - 25 கிராம்

 அக்கரா - ஒரு சிறிய துண்டு

 சித்தரத்தை - ஒரு சிறிய துண்டு

 சன்னயிரு - 25 கிராம்

 சாலியல் - 50 கிராம்

 சதகுப்பை - 50 கிராம்

செய்முறை:

சுக்கு, மிளகு, திப்பிலி, நறுக்கு மூலம், ஓமம், பெருங்காயம், அக்கரா, சித்தரத்தை, சன்னயிரு, சாலியல் மற்றும் சதகுப்பையை அம்மியில் நன்கு தட்டி பிறகு மிக்ஸியில் சேர்த்து அரைத்து பொடியாக்கி சலித்து வைத்துக் கொள்ளவும். இவையெல்லாம் சற்று கடினமாக இருக்கும் என்பதால் நன்கு தட்டிவிட்டு பிறகு மிக்ஸியில் அரைத்தால் மட்டுமே உடைந்து பொடியாகும். இல்லையென்றால், மிக்ஸியின் பிளேடு உடைந்துவிடும். இத்துடன் தேவையானவற்றில் மீதமிருப்பவைகளை சேர்த்து அரைக்கவும். இப்படி அரைத்து சலித்தெடுத்து வைப்பதுதான் பச்சை மருந்துப்பொடி. பிறகு, காற்றுப்புகாத ஒரு பாட்டிலில் போட்டு வைத்து, அவ்வப்போது கஷாயம் செய்து, பாலூட்டும் தாய்மார்களுக்குக் கொடுக்கவும்.

கஷாயம் செய்யும் விதம்:

அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் ஒரு டீஸ்பூன் பச்சை மருந்துப் பொடி, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும். பிறகு, தட்டிய கருப்பட்டி சிறிது சேர்த்துக் கரைந்ததும் எடுத்து வடிகட்டி பிறகு பரிமாறவும்.

குறிப்பு:

பாலூட்டும் தாய்மார்களுக்கு குழந்தை பிறந்த முதல் மாதம் இதைக் குடிக்கக் கொடுக்கும்போது, கர்ப்பப்பை விரைவில்  குணமடைய உதவும். மேலும், தாய்ப்பாலின் மூலமாக இந்த மருந்தின் பலன் குழந்தையைச் சென்றடையும்; குழந்தைக்கு வயிற்று வலி, ஒவ்வாமை போன்றவை ஏற்படாமல் தவிர்க்கும்.

No comments:

Post a Comment