Friday 18 November 2016

கிர்ணி - பாதாம் ஸ்மூத்தி



தேவையானவை: கிர்ணிப்பழம் சிறியது - 1, நீரில் ஊறவைத்த பாதாம் பருப்பு - 5, வெல்லப்பாகு - தேவையான அளவு, காய்ந்த கிர்ணிப்பழ விதைகள் - 1 டீஸ்பூன்.

செய்முறை: வெல்லத்தில் சிறிது நீர் விட்டுக் காய்ச்சி, வெல்லப்பாகாக்கி, வடிகட்டி வைத்துக்கொள்ளவும். பாதாம் தோலை உரித்து, நறுக்கிய கிர்ணிப்பழத்தை உடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். இதில் வெல்லப்பாகு சேர்த்துக் கலந்து, கிர்ணி விதையைத் தூவிப் பருகலாம்.

பலன்கள்: கிர்ணிப்பழத்தில் புரதம், கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், இரும்புச்சத்து நிறைவாக உள்ளன. உடலுக்கு குளிர்ச்சி தரும். சோர்வை நீக்கி, சக்தியைக் கொடுக்கும். வைட்டமின் பி, சி ஓரளவு இருப்பதால், வயிற்றுப்புண்ணுக்கு நல்லது. பாதாமில் புரதம், நார்ச்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளன. மலச்சிக்கல், சுவாசக் கோளாறுகள், இதயக் கோளாறுகள், ரத்தசோகை, பித்தப்பைக்கல் போன்ற பிரச்னைகள் கட்டுப்படும்.

No comments:

Post a Comment