Sunday 20 November 2016

தாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | பூண்டு ரசம்

தாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | பூண்டு ரசம்

தேவையானவை:

 புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு

 பூண்டு - 8 பல்

 காய்ந்த மிளகாய் - ஒன்று

 சீரகம் - ஒரு டீஸ்பூன்

 வெந்தயம் - அரை  டீஸ்பூன்

 நெய் () நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புளியை கால் கப் தண்ணீரில் ஊறவைக்கவும். பூண்டு மற்றும் சீரகத்தை தட்டிக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய்/நல்லெண்ணெய் சேர்த்துச் சூடானதும் வெந்தயம், காய்ந்த மிளகாய்தட்டி வைத்துள்ள பூண்டு, சீரகம் சேர்த்து வதக்கவும். பிறகு புளிக்கரைசல், தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

குறிப்பு:

அதிகக் காரம் இல்லாத இந்த ரசம் எளிதில் ஜீரணமாகும்.

No comments:

Post a Comment