Sunday 20 November 2016

தாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | முட்டை ரசம்

முட்டை ரசம்

 

தேவையானவை:

 புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு

 நாட்டுக்கோழி முட்டை - ஒன்று

 பூண்டு - 4 பல்

 வேப்பம்பூ - ஒரு டீஸ்பூன் (விரும்பினால்)

 சீரகம் - ஒரு டீஸ்பூன்

 வெந்தயம் - அரை  டீஸ்பூன்

 மிளகு - ஒரு டீஸ்பூன்

 கொத்தமல்லித்தழை - கால் கப்

 கறிவேப்பிலை - சிறிது

 நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புளியை ஒரு கப் தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைக்கவும். பூண்டு, சீரகம், மிளகு, சிறிது கொத்தமல்லித்தழையை சேர்த்து தட்டிக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் வெந்தயம் மற்றும் தட்டி வைத்துள்ள கலவையைச் சேர்த்து சிறிது நேரம் மட்டும் வதக்கவும். இத்துடன்  புளிக்கரைசல், தேவையான தண்ணீர், வேப்பம்பூ, உப்பு சேர்த்து நுரை கூடி வரும்போது ஒரு முட்டையை உடைத்து மெதுவாக ஊற்றவும். முட்டை வேகும்வரை கொதிக்கவிடவும். 3 நிமிடங்களில் முட்டை வெந்துவிடும். பிறகு மீதமிருக்கும் கொத்தமல்லியைத்தழை, கறிவேப்பிலையைத் தூவி இறக்கவும். சாதத்துடன் இந்த ரசம், அதனுள் உள்ள முட்டையை சேர்த்துப் பரிமாறவும்.

No comments:

Post a Comment