Friday 18 November 2016

தர்பூசணி ஸ்மூத்தி


தேவையானவை: விதை நீக்கிய தர்பூசணிப் பழம் - 1 கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், புதினா இலை - 4, நாட்டுச்சர்க்கரை - தேவையான அளவு.

செய்முறை: தர்பூசணியை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். புதினா இலையுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, தேவையெனில் வடிகட்ட வேண்டும். அதனுடன், எலுமிச்சைச் சாறு, விருப்பப்பட்டால், நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் கலந்து பருகலாம். இதில், புதினா இலையை தூவிவிட்டுப் பரிமாறினால், மணமும் சுவையும் அதிகரிக்கும்.

பலன்கள்: தர்பூசணியிலும் எலுமிச்சையிலும் வைட்டமின் பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, நார்ச்சத்து நிறைந்துள்ளன. ஜீரணத்தைச் சீர்ப்படுத்தும். உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியைத் தரும். களைப்பு, வயிற்றுப்போக்கு, பித்தம் நீங்கும்.

No comments:

Post a Comment