கதம்பக் கூட்டு (Kadamba Kootu)
கதம்பக் கூட்டு (Kadamba Kootu)
தேவையானவை:
நறுக்கிய பூசணிக்காய், பீன்ஸ், கேரட், வாழைக்காய், மொச்சை பீன்ஸ், காராமணி பீன்ஸ் போன்ற காய்கறிகள் - அரை கிலோ
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - அரை கப்
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
சீரகம் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
எல்லா காய்கறிகளையும் வேக வைத்துக்கொள்ளவும். தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை மென்மையாக அரைத்துக்கொள்ளவும். இதை வேகவைத்த காய்கறிகளுடன் சேர்த்து மஞ்சள்தூள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். வாணலில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்துக் கிளறியதில் சேர்க்கவும். கொத்தமல்லித்தழைச் சேர்த்து சாதத்துடன் பரிமாறவும்.

No comments:
Post a Comment