Thursday, 6 October 2016

வேப்பம்பூ மாங்காய் பச்சடி

வேப்பம்பூ மாங்காய் பச்சடி

வேப்பம்பூ மாங்காய் பச்சடி

 

தேவையானவை:

 

பெரியதாக நறுக்கிய மாங்காய் - ஒரு கப்

வெல்லம் - 100 கிராம்

உப்பு - அரை கப்

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

நெய் - ஒரு டீஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

காய்ந்த வேப்பம்பூ - ஒரு டீஸ்பூன் (ஃபிரெஷ்ஷாக இருக்கும் வேப்பம்பூவைப் பயன்படுத்துவதாக இருந்தால், இதன் இதழ்களை மட்டும் பயன்படுத்தவும். இல்லையென்றால், பச்சடி கசக்கும்)

 

செய்முறை:

 

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மாங்காய்த் துண்டுகளை சேர்த்து கொதிக்கவிடவும், இதில் மஞ்சள்தூள் சேர்க்கவும். மாங்காய்த் துண்டுகள் வெந்தவுடன் இதில் வெல்லத்தைச் சேர்த்து, வெல்லம் கரையும் வரை அடுப்பில் வைக்கவும். வாணலியில் நெய்யை ஊற்றி சூடுபடுத்தி, கடுகு சேர்த்து, அதில் பச்சை மிளகாய் சேர்த்து சில நிமிடத்தில் அதில் வேப்பம்பூவைச் சேர்த்து சில நிமிடங்கள் வைக்கவும். பின், இதை மாங்காயுடன் சேர்க்க வேண்டும். இதில் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். சூடான சாதத்துடன் பரிமாறவும்.

 

 

No comments:

Post a Comment