ரவை ஸ்வீட் கொழுக்கட்டை
ரவை ஸ்வீட் கொழுக்கட்டை
தேவையானவை:
ரவை - ஒரு கப்
சர்க்கரை - முக்கால் கப்
துருவிய தேங்காய் - அரை கப்
உப்பு - ஒரு சிட்டிகை
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
தண்ணீர் - ஒரு கப்
செய்முறை:
ரவையை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். வறுத்த ரவையுடன் சர்க்கரை, உப்பு சேர்த்துக் கிளறவும். ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரைச் சேர்த்துக் கொதிக்க விடவும். பிறகு இறக்கி ரவை பாத்திரத்தில் ஊற்றி ஒரு மூடியால் மூடி வேகவிடவும். அது வேகும் வரை அப்படியே மூடிவைக்கவும். சர்க்கரை கரைந்து ரவையுடன் சேர்ந்து ரவை கால் பாகம் வெந்திருக்கும். இத்துடன் துருவிய தேங்காய், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும். ஆறியவுடன் கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.

No comments:
Post a Comment