செர்ரி ஃப்ரைட் மோதகம்
செர்ரி ஃப்ரைட் மோதகம்
தேவையானவை:
கோதுமை மாவு - ஒரு கப்
தண்ணீர் - சிறிதளவு
உப்பு - ஒரு சிட்டிகை
பூரணத்துக்கு:
ஸ்வீட் கோவா - 100 கிராம்
செர்ரிப்பழம் - 10
பாதாம் பருப்பு - 6
ட்யூட்டி ஃப்ரூட்டி - 2 டேபிள்ஸ்பூன்
பொரிக்க:
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
வாய் அகன்ற ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவைச் சேர்த்து அத்துடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும். பாதாம், செர்ரிப் பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஸ்வீட் கோவாவுடன் நறுக்கிய செர்ரிப் பழம், பாதாம் பருப்பு, ட்யூட்டி ஃப்ரூட்டி சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பிசைந்த கோதுமை மாவை சின்னச் சின்ன உருண்டைகளாக்கி, சப்பாத்தி பதத்துக்கு தேய்த்துக் கொள்ளவும். பிறகு தேய்த்தவற்றின் நடுவே சிறிய கிண்ணத்தை வைத்து அழுத்தி, வட்டமான மாவு பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளவும். அந்த வட்டத்தின் நடுவே, ரெடி செய்து வைத்துள்ள செர்ரி மற்றும் நட்ஸ் பூரணத்தை வைத்து, கையாலேயே மோதகம் போல செய்யவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் விட்டு சூடானதும், ரெடி செய்து வைத்துள்ள மோதகங்களைச் சேர்த்து பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

No comments:
Post a Comment