Saturday 8 October 2016

சோயா பர்கர்

சோயா பர்கர்

சோயா பர்கர்

 

தேவையானவை: பர்கர் பன் - 1, லெட்டூஸ் இலைகள்  சிறிதளவு, மயோனைஸ்  தேவையான அளவு, சீஸ் வில்லை தேவையான அளவு,

 

சோயா கட்லெட் செய்ய: சோயா சங்க்ஸ்  ஒரு கப், பால்  ஒரு கப், சாதம் (உருளைக்கிழங்குக்கு பதிலாக)  அரை கப், பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 1, மிளகாய்த்தூள்  கால் டீஸ்பூன், சீரகத்தூள்  ஒரு சிட்டிகை, கரம் மசாலா  ஒரு சிட்டிகை, கொத்தமல்லித்தழை  சிறிதளவு, உப்பு  தேவையான அளவு, எண்ணைய்  தேவையான அளவு

 

மேல் கோட்டிங்: மைதா, உப்பு, பிரெட் தூள்  தேவையான அளவு

 

செய்முறை: வெங்காயத்தை நீளவாக்கில் சன்னமாக நறுக்கவும். பாலில் சோயா சங்க்ஸை சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து, பிறகு மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அரைத்த சங்க்ஸ் கலவையை ஒரு பவுலில் போட்டு, இதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம் மசாலாவைச் சேர்க்கவும். சாதத்தை மசித்து, இந்தக் கலவையில் சேர்த்து, நன்றாகக் கலக்கவும். இதனை வ‌ட்ட வடிவில் சிறிய கட்லெட்களாகத் தட்டி வைக்கவும். மைதா மாவில், தண்ணீர், உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். தட்டி வைத்திருக்கும் கட்லெட்களை மைதாவில் நனைத்தெடுத்து, பிரெட் தூளில் புரட்டி, எண்ணெயில் மொறுமொறுப்பாகப் பொரித்தெடுக்கவும். பர்கர் பன்னை டோஸ்ட் செய்து, குறுக்காக வெட்டி, அதனுள் சோயா கட்லெட்டை வைத்து, மயோனைஸ், லெட்டூஸ் இலைகள், சீஸ், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை மேலே வைத்து, குழந்தைகளுக்குக் கொடுக்கவும்.

 

No comments:

Post a Comment