Saturday 8 October 2016

சைனீஸ் தோசை

சைனீஸ் தோசை

சைனீஸ் தோசை

 

தேவையானவை: தோசை மாவு  ஒரு கப்.

 

செஷ்வான் சாஸ் தயாரிக்க: சிவப்பு மிளகாய்-  8 - 10, பூண்டு - 4 பல், தக்காளி கெட்ச்அப் - 2 டீஸ்பூன், வினிகர்  ஒரு டீஸ்பூன், குடமிளகாய் - 1,கார்ன்ஃப்ளார்  தேவையான அளவு, எண்ணெய்  தேவையான அளவு, உப்பு  சிறிதளவு

 

செய்முறை: கார்ன் ஃப்ளாரை ஒரு பவுலில் கொட்டி, சிறிது தண்ணீர் விட்டு பசைப் பதத்துக்கு கலக்கி வைக்கவும். சிவப்பு மிளகாய், பூண்டு இரண்டிலும் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து, ஆறவிட்டு அரைத்துக் கொள்ளவும். குடமிளகாயைப் பொடியாக நறுக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, குடமிளகாயைப் போட்டு நன்கு வதக்கவும். தொடர்ந்து மிளகாய் விழுது, உப்பு, வினிகர் மற்றும் தக்காளி கெட்ச்அப் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். சிறிது தண்ணீரையும் கார்ன்ஃப்ளார் விழுதையும் சேர்த்தால், அந்தக் கலவை சிறிது தளதளவென 'சாஸ்' போல வரும். இதுதான் செஷ்வான் சாஸ். தோசை மாவில், வழக்கமான தோசை ஊற்றி, தோசை வெந்ததும் நாம் தயாரித்து வைத்திருக்கும் செஷ்வான் சாஸை தோசை மேல் தடவிப் பரப்பி விட்டு, சுருட்டி எடுக்கவும்.

 

No comments:

Post a Comment