Saturday 8 October 2016

ஸ்பைஸி கார்ன்

ஸ்பைஸி கார்ன்

ஸ்பைஸி கார்ன்

 

தேவையானவை: வேகவைத்த ஸ்வீட் கார்ன் முத்துக்கள்  ஒரு கப், மைதா  ஒரு டேபிள்ஸ்பூன், சோள மாவு  ஒரு டேபிள்ஸ்பூன், அரிசி மாவு  ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள்  கால் டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு, இஞ்சிபூண்டு விழுது  அரை டீஸ்பூன், மிளகுத்தூள்  ஒரு சிட்டிகை, எண்ணெய்  பொரிக்க

 

மசாலாவுக்கு: பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்  அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்  ஒரு டீஸ்பூன்.

 

செய்முறை: ஒரு பவுலில் வேகவைத்த ஸ்வீட்கார்ன் முத்துக்கள் பாதி, இஞ்சிபூண்டு விழுது, மிளகாய்த்தூள் பாதி, உப்பு தேவையான அளவு, மிளகுத்தூள் பாதி ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்தக் கலவையில், மைதாமாவு, அரிசிமாவு, சோளமாவு ஆகியவை ஒவ்வொன்றிலும் தலா அரை டேபிள்ஸ்பூன் போட்டு, ஸ்வீட்கார்ன் முழுவதும் படிவது போல நன்கு குலுக்கி விடவும் (கைகளால் பிசிற வேண்டாம். அது சரியாகப் படியாது). அடுப்பில் எண்ணெயைக் காய வைத்து, குலுக்கி வைத்திருக்கும் ஸ்வீட்கார்ன் கலவையைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரிக்கவும். மீதிப் பாதி கார்னிலும், மேலே சொன்ன முறையில், மீதி இருக்கும் மசாலா மற்றும் மாவுகளைச் சேர்த்துக் குலுக்கி, எண்ணெயில் பொரிக்கவும். ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெயைச் சுடவைத்து, வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். அதிலேயே பச்சை மிளகாய், வெங்காயத்தாளைப் போட்டு வதக்கவும். ஏற்கெனவே பொரித்த ஸ்வீட் கார்னுடன் இதைச் சேர்த்து நன்கு குலுக்கி விட்டு, சூடாகப் பரிமாறவும்.

 

No comments:

Post a Comment