வடைகறி
வடைகறி
தேவையானவை:
கடலைப்பருப்பு 200 கிராம்
காய்ந்த மிளகாய் 4
சோம்பு 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் 1 (பொடியாக நறுக்கவும்)
இஞ்சிபூண்டு விழுது 1 டீஸ்பூன்
தக்காளி 1 (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் 2 (பொடியாக நறுக்கவும்)
மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய புதினா
அரை டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
எண்ணெய் தேவையான அளவு
தேங்காய் அரை முடி
(துருவி அரைக்கவும்)
கரம் மசாலாத்தூள் அரை டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய்,
பிரியாணி இலை தலா 2
சீரகம் அரை டீஸ்பூன்
செய்முறை:
கடலைப்பருப்பை தண்ணீரில் இரண்டு முறை கழுவி, காய்ந்த மிளகாய், சோம்பு சேர்த்து தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்து மிக்ஸியில் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு, கலவையை கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். அரைத்தவற்றை உதிரி பக்கோடா போல எண்ணெயில் பொரித்து எடுக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்துப் பொரிந்ததும் சீரகம், வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இஞ்சிபூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கவும். இதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் தேங்காய், பொரித்து வைத்துள்ள உதிரிபக்கோடா சேர்த்துக் கிளறி இறக்கினால் வடைகறி ரெடி.

No comments:
Post a Comment