Wednesday, 5 October 2016

சென்னா சாட்

சென்னா சாட்

சென்னா சாட்

 

தேவையானவை:

 

சென்னா 100 கிராம்

 

வெங்காயம்  1 (பொடியாக நறுக்கவும்)

 

பச்சை மிளகாய்  2 (பொடியாக நறுக்கவும்)

 

தக்காளி  1 (பொடியாக‌ நறுக்கவும்)

 

மிளகாய்த்தூள்  அரை டீஸ்பூன்

 

சீரகத்தூள்  கால் டீஸ்பூன்

 

கருப்பு உப்பு  கால் டீஸ்பூன்

 

உப்பு  தேவையான அளவு

 

கொத்தமல்லித்தழை  சிறிது (பொடியாக நறுக்கவும்)

 

எலுமிச்சைச் சாறு  ஒன்றில் பாதி (சாறு எடுக்கவும்)

 

செய்முறை:

 

சென்னாவை தண்ணீரில் எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு தண்ணீர் வடித்து, குக்கரில் சேர்த்து உப்பு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுக்கவும். சூடு ஆறியதும் தேவையானவற்றில் உள்ள மற்ற பொருட்கள் அனைத்தையும் சென்னாவுடன் கலந்து ஒரு பவுலில் வைத்துப் பரிமாறவும்.

 

No comments:

Post a Comment