Wednesday, 5 October 2016

சிங்கப்பூர் நூடுல்ஸ்

சிங்கப்பூர் நூடுல்ஸ்

சிங்கப்பூர் நூடுல்ஸ்

 

தேவையானவை:

 

வேக வைத்த நூடுல்ஸ்  200 கிராம்

 

எண்ணெய்  2 டேபிள்ஸ்பூன்

 

பெரிய வெங்காயம்  ஒன்றில் பாதி (ஸ்லைஸ்களாக நறுக்கவும்)

 

குடமிளகாய்  ஒன்றில் பாதி

 

கேரட்  1 (நீளமாக‌ நறுக்கவும்)

 

பீன்ஸ் 10 (நீளமாக நறுக்கவும்)

 

இஞ்சி  சிறிதளவு (நீளமாக நறுக்கவும்)

 

பூண்டு  5 (நீளமாக நறுக்கவும்)

 

முட்டைகோஸ்  25 கிராம் (நீளமாக நறுக்கவும்)

 

சோயா சாஸ்  1 டீஸ்பூன்

 

பழுப்புச் சர்க்கரை  1 டீஸ்பூன்

 

வெள்ளை மிளகுத்தூள்  1 டீஸ்பூன்

 

உப்பு  தேவையான அளவு

 

ஸ்பிரிங் ஆனியன்  சிறிதளவு

 

செய்முறை:

 

அடுப்பில் வாணலியை வைத்து, அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வாணலியின் உள்பக்கம் முழுவதும் பரவுமாறு ஒரு சுழற்றி, சுழற்ற மீதம் இருக்கும் எண்ணெயை வாணலியில் ஊற்றி இஞ்சி, பூண்டு சேர்த்து, பச்சை வாசனை போனதும், வெங்காயம், காய்கறிகள் சேர்த்து வதக்கி, மிதமான தீயில் வேக விடவும். காய்கறிகள் முக்கால் பதம் வெந்ததும், தீயை அதிகப்படுத்தி நூடுல்ஸ், பழுப்புச் சர்க்கரை, சோயா சாஸ், வெள்ளை மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். நூடுல்ஸில் கலவை எல்லாம் ஒட்டிக்கொண்ட பிறகு ஸ்பிரிங் ஆனியன் தூவிப் பரிமாறவும்.

 

No comments:

Post a Comment