பேபி ஃகார்ன் மஞ்சூரியன்
பேபி ஃகார்ன் மஞ்சூரியன்
தேவையானவை:
பேபி ஃகார்ன் 200 கிராம்
மைதா, சோள மாவு
தலா 1 டேபிள்ஸ்பூன்
சோள மாவு அரை டேபிள்ஸ்பூன்
குடமிளகாய் ஒன்றில் பாதி
இஞ்சி சிறிய துண்டு (பொடியாக நறுக்கவும்)
பூண்டு 3 (பொடியாக நறுக்கவும்)
பெரிய வெங்காயம் 1 (பொடியாக நறுக்கவும்)
சில்லி பேஸ்ட் அரை டீஸ்பூன்
நசுக்கிய மிளகு அரை டீஸ்பூன்
ஸ்பிரிங் ஆனியன் சிறிது
செலரி இலைகள் சிறிது
சோயா சாஸ் 1 டேபிள்ஸ்பூன்
டொமேட்டோ சாஸ் 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் 2
(பொடியாக நறுக்கவும்)
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை:
ஒரு பவுலில் மைதா, சோள மாவை சேர்த்து சிறிது தண்ணீர் கலக்கி பேஸ்ட் ஆக்கவும். இதில் பேபி ஃகார்னை நனைத்து எடுத்து, எண்ணெயில் பொரித்து வைக்கவும். ஒரு பவுலில் அரை டேபிள்ஸ்பூன் சோளமாவு, 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர்விட்டு கலக்கி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கியதும் வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இதில் குடமிளகாய், சில்லி பேஸ்ட், சோயா சாஸ், டொமேட்டோ சாஸ், உப்பு சேர்த்துக் கிளறி தேவையான அளவு தண்ணீர் விட்டு பச்சை வாசனை போக கொதிக்க விடவும். இதில் மைதாசோளமாவு பேஸ்ட்டை ஊற்றவும். கிரேவி கெட்டியாகும்போது பொரித்த பேபிஃகார்னை சேர்த்து செலரி, நசுக்கிய மிளகு, ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

No comments:
Post a Comment