ஒத்த பனியம்
ஒத்த பனியம்
தேவையானவை:
அரிசி மாவு - அரை கிலோ (கொரகொரப்பாக அரைக்கவும்)
தேங்காய் - 2
முட்டை - ஒன்று
உப்பு - ஒரு சிட்டிகை
நெய் - 100 கிராம்
எண்ணெய் - 100 கிராம்
செய்முறை :
அரிசிமாவை சலித்து வைக்கவும். தேங்காய்களை உடைத்து 3 மூடிகளிலிருந்து பால் எடுக்கவும். மீதமுள்ள அரை மூடி தேங்காயைத் துருவிக் கொள்ளவும். அரிசி மாவில் தேங்காய்ப்பால் மற்றும் உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற விடவும். மாவு அடைமாவு பதத்துக்கு கெட்டியாக இருக்க வேண்டும். தோசை வார்க்கும் முன்பாக துருவிய தேங்காய் மற்றும் முட்டையை அடித்துக் கலக்கவும். இனி மாவை தோசைக்கல்லில் அடையாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய், நெய் கலந்து ஊற்றி, இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

No comments:
Post a Comment