Saturday, 1 October 2016

கோழியாப்பம்

கோழியாப்பம்

கோழியாப்பம்

 

தேவையானவை:

 மைதா மாவு - அரை கிலோ

 தேங்காய் - 1

 முட்டை - 1

 நெய் - 3 டீஸ்பூன்

 மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

 உப்பு - ஒரு சிட்டிகை

 

செய்முறை :

தேங்காயைத் துருவி ஒன்று அல்லது 2 டம்ளர் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும். மைதா மாவில் இந்தப் பாலை சிறிது சிறிதுதாக ஊற்றி கட்டியில்லாமல் தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும். முட்டையை உடைத்து ஊற்றி நெய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்துகொள்ளவும். ஒரு கரண்டி மாவெடுத்து நான்-ஸ்டிக் தவாவில் ஊற்றி லேசாக ஒரு சுழற்று சுழற்றி விடவும். (ஆப்பம் ஊற்றுவது போல) மூடி போட்டு அடுப்பை சிம்மில் வைத்து வெந்ததும் இறக்கவும். சுவையான கோழியாப்பம் தயார்.

இதற்குத் தொட்டுக்கொள்ள சிக்கன் கறி ஆனம் (குழம்பு)சூப்பராக இருக்கும்.

No comments:

Post a Comment