ஜவ்வரிசி
ஜவ்வரிசி
தேவையானவை:
நைலான் ஜவ்வரிசி - 100 கிராம்
தேங்காய் - 1
முந்திரிப்பருப்பு, பாதாம், பிஸ்தா - 50 கிராம் (மெல்லியதாக நறுக்கவும்)
ஏலக்காய் - 3
சர்க்கரை - தேவையான அளவு
செய்முறை :
தேங்காயில் முதல் பால், இரண்டாம் பால், மூன்றாம் பால் என எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து ஜவ்வரிசியை 3-ம் பாலில் வேக விடவும். பின்னர் 2-ம் பாலில் ஊற்றி வேக விடவும். ஜவ்வரிசி நன்றாக வெந்ததும் தேவையான அளவு சர்க்கரை சேர்க்கவும். இத்துடன் முந்திரிப்பருப்பு, பாதாம், பிஸ்தாவை சேர்த்துக் கொதிக்க விடவும். இறக்குவதற்கு முன் முதல் தேங்காய்ப்பால் சேர்த்து அடுப்பை அணைத்து இறக்கவும்.
சிலோன் அல்லது நைலான் ஜவ்வரிசியை மட்டும் இதற்கு உபயோகப்படுத்தவும்

No comments:
Post a Comment