Saturday 8 October 2016

பனானா பான் கேக்

பனானா பான் கேக்

பனானா பான் கேக்

 

தேவையானவை: மைதா  அரை கப், சர்க்கரை  அரை டேபிள்ஸ்பூன், பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன், உப்பு  ஒரு சிட்டிகை, முட்டை - 1, பால்  கால் கப், தேங்காய்ப் பால்  கால் கப், எண்ணெய்  ஒரு டேபிள்ஸ்பூன், வாழைப்பழம் - 2.

 

செய்முறை: வாழைப்பழத்தை மசித்துக்கொள்ளவும். பவுலில் முட்டையை உடைத்து ஊற்றி, நுரை வருமளவு அடித்துக் கொள்ளவும். மைதா மாவு, உப்பு, பேக்கிங் பவுடர் மூன்றையும் கலந்து சலித்துக் கொள்ளவும். சலித்த மாவை, ஒரு பவுலில் போட்டு நடுவில் குழியாக்கி, அடித்த முட்டை, எண்ணெய், பால் மற்றும் தேங்காய்ப்பால் ஊற்றவும். அதோடு, மசித்த வாழைப்பழத்தைப் போட்டு, மாவாகக் கலந்து கொள்ளவும். தோசை தவாவில் இந்த மாவை, சிறு தோசைகளாக வார்க்கவும். தேவைப்பட்டால், தோசையின் மேல் சாக்லேட் சாஸ் மற்றும் தேன் வைத்து, 'டாப்பிங்' செய்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

 

No comments:

Post a Comment