Saturday 8 October 2016

கடலைமாவு கருப்பட்டி லட்டு

கடலைமாவு கருப்பட்டி லட்டு

கடலைமாவு கருப்பட்டி லட்டு

 

தேவையானவை: கடலைமாவு  ஒரு கப், கருப்பட்டி  முக்கால் கப், தண்ணீர்  கால் கப், ஏலக்காய்ப்பொடி  ஒரு டீஸ்பூன், நெய்  சிறிது

 

செய்முறை:அடுப்பில் நான்ஸ்டிக் கடாயை வைத்து, கடலைமாவை இட்டு தீயைக் குறைத்து வைத்து 8 நிமிடங்கள் கிளறி எடுத்து வைக்கவும். கடலைமாவின் நிறம் மாறவோ, தீய்ந்தோ போகக் கூடாது. கடாயை அடுப்பில் ஏற்றி, கருப்பட்டியை இட்டு கால் கப் தண்ணீர் ஊற்றிக் கரைத்து வடிகட்டவும். மீண்டும் கடாயை அடுப்பில் ஏற்றி வடிகட்டிய கரைசலை ஊற்றி குறைந்த தீயில் திக்காக மாறும் வரை கிளறவும். இதனுடன் கடலைமாவு, ஏலக்காய்ப்பொடி சேர்த்து தொடர்ந்து கிளறவும். மாவு, சட்டியில் ஒட்டாத பதம் வரும்போது இறக்கவும். கலவை இளம்சூடாக இருக்கும்போதே, கையில் நெய்யைத் தடவிக்கொண்டு உருண்டைப் பிடித்து காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்தால், நெடுநாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

 

No comments:

Post a Comment