Saturday 8 October 2016

ஸ்டஃப்டு வெண்டைக்காய்

ஸ்டஃப்டு வெண்டைக்காய்

ஸ்டஃப்டு வெண்டைக்காய்

 

தேவையானவை: வெண்டைக்காய் - 10, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

 

ஸ்டஃப் செய்வதற்கு: கடலைமாவு  அரை கப், பெரிய வெங்காயம் - 1, இஞ்சிபூண்டு விழுது  கால் டீஸ்பூன், அம்சூர் பொடி  ஒரு சிட்டிகை, சீரகத்தூள்  ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள்  அரை டீஸ்பூன், கரம் மசாலாத் தூள்  கால் டீஸ்பூன், மஞ்சள்தூள்  ஒரு சிட்டிகை, சர்க்கரை  ஒரு சிட்டிகை, கொத்தமல்லித்தழை  சிறிதளவு.

 

செய்முறை: வெண்டைக்காயைக் கழுவி, காம்பு மற்றும் நுனிப்பகுதியை நீக்கி நடுவே கீறி விடவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். ஸ்ஃட‌ப் செய்வதற்குக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை, தண்ணீர் சேர்க்காமல் பிசிறி வைக்கவும். வெண்டைக்காயின் நடுவே ஸ்டஃபிங் கலவையை வைத்து செட் செய்து...அடுப்பில் நான்ஸ்டிக் பேனை வைத்து எண்ணெய் விட்டு வெண்டைக்காயைத் திருப்பித் திருப்பி விட்டுப் பொரிக்கவும். நன்கு மொறுமொறுவென வெந்ததும் எடுத்துவிடலாம். குழந்தைகளுக்கு ருசியான சைடு டிஷ் அல்லது ஈவினிங் ஸ்நாக்ஸ். வெறும் சாதத்துடன் கூட இதைச் சாப்பிடலாம்.

 

No comments:

Post a Comment