Friday 7 October 2016

மேத்தி மிர்ச்சி பனீர்

மேத்தி மிர்ச்சி பனீர்

மேத்தி மிர்ச்சி பனீர்

 

தேவையானவை:

 

சீரகம் - ஒரு சிட்டிகை

 

பச்சை மிளகாய் - 1 (கீறியது)

 

நறுக்கிய வெங்காயம் - ஒன்றில் பாதி

 

இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

 

பனீர் - 50 கிராம்

 

குட மிளகாய் - 1 (க்யூப்களாக கட் செய்யவும்)

 

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

 

மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்

 

சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

 

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

 

கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

 

கஸூரி மேத்தி  (உலர்ந்த வெந்தயக்கீரை) - 1 டீஸ்பூன்

 

உப்பு - தேவையான அளவு

 

சர்க்கரை - அரை டீஸ்பூன்

 

யெல்லோ கிரேவி - 2 குழிக்கரண்டி

 

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

 

செய்முறை:

 

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சீரகம், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதில் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கி மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் எல்லாம் சேர்த்து வதக்கவும். யெல்லோ கிரேவி சேர்த்துக் கலக்கி, இதில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கிளறவும். தேவையான அளவு உப்பு, சர்க்கரை சேர்த்துக் கிளறவும். இதில் பனீர், குடமிளகாய் சேர்த்து மிக்ஸ் செய்யவும். கலவை கிரேவி பதத்துக்கு வரும் போது கஸூரி மேத்தி சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

 

No comments:

Post a Comment