Friday 7 October 2016

யெல்லோ கிரேவி

யெல்லோ கிரேவி

யெல்லோ கிரேவி

 

தேவையானவை:

 

நீளமாக வெட்டிய வெங்காயம் - 3

 

சீரகம் - கால் டீஸ்பூன்

 

பூண்டு - 1

 

மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்

 

முந்திரிப்பருப்பு - 30 கிராம்

 

உப்பு - தேவையான அளவு

 

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

 

பட்டை - சிறிய துண்டு

 

கிராம்பு - 2

 

ஏலக்காய் - 1

 

சீரகம் - ஒரு சிட்டிகை

 

கரம் மசாலாத்தூள் - ஒன்றரை டீஸ்பூன்

 

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

 

செய்முறை:

 

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து வெங்காயம், சீரகம், பூண்டு, மஞ்சள்தூள், முந்திரிப்பருப்பைச் சேர்த்து அவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் வேக வைத்து இறக்கவும். ஆறியதும் இதை மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும்.

 

அடுப்பில் பேனை வைத்து எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் சேர்த்துத் தாளிக்கவும். இதில் மஞ்சள்தூள் சேர்த்துக் கலக்கி அரைத்த விழுதைச் சேர்த்துக் கிளறவும். கிரேவி கொதிக்கும்போது ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். இதில் கரம் மசாலாத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கிரேவி பதம் வரும் வரை வைத்திருந்து இறக்கி விடவும்.

 

No comments:

Post a Comment