வெஜிடபிள் ஓட்ஸ் பராத்தா
வெஜிடபிள் ஓட்ஸ் பராத்தா
தேவையானவை: கோதுமை மாவு ஒரு கப், ஓட்ஸ் அரை கப், கேரட் - 1, பெரிய வெங்காயம் - 1, மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் ஒரு டீஸ்பூன், பனீர் துருவல் சிறிதளவு, மஞ்சள்தூள் சிட்டிகை, இஞ்சிபூண்டு விழுது ஒரு டீஸ்பூன், ஓமம் கால் டீஸ்பூன், நெய் ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை சிறிதளவு.
செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கேரட்டைத் துருவிக் கொள்ளவும். நெய் தவிர்த்து, மீதி அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து, சப்பாத்தி மாவு போலப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி, பராத்தாக்களாகத் திரட்டவும். இதை தோசை தவாவில் போட்டு, இருபுறமும் நெய் தடவி, சுட்டெடுக்கவும்.
No comments:
Post a Comment