Saturday 8 October 2016

மின்ட் பொட்டேட்டோ ரைஸ்

மின்ட் பொட்டேட்டோ ரைஸ்

மின்ட் பொட்டேட்டோ ரைஸ்

 

தேவையானவை: பச்சரிசி  ஒரு கப், புதினா இலைகள்  ஒரு கட்டு, கொத்தமல்லித்தழை  ஒரு கைப்பிடி, பச்சை மிளகாய் - 3, பூண்டு  - 5 பல், இஞ்சி  ஒரு அங்குல நீளமுள்ள துண்டு, உருளைக்கிழங்கு - 2, உப்பு  தேவையான அளவு, மிளகாய்த்தூள்  கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.

 

செய்முறை: புதினா, கொத்தமல்லித்தழையைச் சுத்தம் செய்து வைக்கவும். உருளைக்கிழங்குகளைக் கழுவி, பொடியான சதுரங்களாக நறுக்கவும். அரிசியைக் கழுவி தண்ணீர் சேர்த்து, குக்கரில் வைத்து 3 விசில் வந்ததும் இறக்கி, ஒரு தாம்பாளத்தில் கொட்டி ஆறவிடவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு, சூடானதும், இஞ்சித்துண்டு, பூண்டு மற்றும் பச்சை மிளகாயைக் கீறிப் போட்டு வதக்கவும். அதோடு புதினா இலைகளைச் சேர்த்து வதக்கவும். இலையில் இருக்கும் தண்ணீர் வற்றி சுருங்கியதும், ஆறவிட்டு மிருதுவாக அரைத்து எடுக்கவும். இந்த விழுதை சாதத்தில் கொட்டி தேவையான அளவு உப்புச் சேர்த்துப் பிசிறவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, உருளைக்கிழங்கை நன்கு வதக்கி, சிறிது உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும். உருளைக்கிழங்கு வதங்கியதும், சாதத்தில் கொட்டிக் கிளறி, சூடாக சாப்பிடத் தரலாம். லஞ்சுக்கு 'பேக்' செய்வதற்கும் இந்த சாதம் ஏற்றது.

 

 

No comments:

Post a Comment