Saturday 8 October 2016

சம்பா கோதுமை ரவா வெஜிடபிள் பொங்கல்

சம்பா கோதுமை ரவா வெஜிடபிள் பொங்கல்

சம்பா கோதுமை ரவா வெஜிடபிள் பொங்கல்

 

தேவையானவை:

 

சம்பா கோதுமை ரவை - ஒரு கப்

பீன்ஸ், கேரட், குடமிளகாய், பச்சை பட்டாணி, பாசிப்பருப்பு - தலா  கால் கப்

உப்பு - தேவையான அளவு

மஞ்சள்த்தூள் - ஒரு சிட்டிகை (விரும்பினால்)

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி

பச்சைமிளகாய் - 4

மிளகு, சீரகம் - 2 டேபிள்ஸ்பூன் (கொரகொரப்பாகப் பொடித்தது)

நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

இஞ்சி - 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2

முந்திரி - 25 கிராம்

 

செய்முறை:

 

பாசிப் பருப்பைக் கழுவி ஒரு பாத்திரத்தில் இட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். பருப்பை மசிக்கவோ, குழைவாக வேக வைக்கவோ கூடாது. சம்பா கோதுமை ரவையை குக்கரில் சேர்த்து, மூன்று மடங்கு தண்ணீர் ஊற்றி மூன்று விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, மிளகு, சீரகம் போட்டுத் தாளித்துப் பின் பட்டை, கிராம்பு, ஏலக்காய், நறுக்கிய காய்கறிகள் சேர்த்து வதக்கிப் பின் உப்பு, தண்ணீர் சேர்த்து காய்கறிகளை வேக விடவும். காய்கறிகள் வெந்ததும் கோதுமை ரவை, பாசிப்பருப்புக் கலைவையைச் சேர்த்து கிளறி, பரிமாறும் முன்பு நெய்யில் முந்திரியை வறுத்து இதில் சேர்த்துப் பரிமாறுங்கள்.

 

No comments:

Post a Comment