Saturday 8 October 2016

தினை வெண்பொங்கல்

தினை வெண்பொங்கல்

தினை வெண்பொங்கல்

 

தேவையானவை:

 

தினை - 2 கப்

பாசிப் பருப்பு - ஒரு கப்

உப்பு - தேவையான அளவு

இஞ்சி - 2 டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி

மிளகு, சீரகப்பொடி - 2 டீஸ்பூன் (கரகரப்பாகப் பொடித்தது)

நெய் - கால் கப்

முந்திரி - 50 கிராம்

 

செய்முறை:

 

தினை, பாசிப் பருப்பு ஆகியவற்றை வெறும் வாணலியில் தனித்தனியே வாசனை வரும் வரை (தீய்ந்து விடக்கூடாது) வறுத்துக் கொள்ளவும். பிறகு, இரண்டையும் சேர்த்து 6 கப் தண்ணீர் விட்டு குக்கரில் இட்டு 3 விசில்கள் வரும் வரை அடுப்பை சிம்மில் வைத்து வேகவிடவும். பிரஷர் போனதும், சூடாக இருக்கும் தினை பருப்புக் கலவையில் உப்பு சேர்த்து நன்கு மசித்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, மிளகு சீரகப்பொடி, முந்திரி ஆகியவற்றைச் சேர்த்துப் பொன்னிறமாக வறுத்து பொங்கலில் கொட்டிக் கலந்து பரிமாறவும்.

 

 

No comments:

Post a Comment