Saturday 8 October 2016

ட்ரை ஃப்ரூட்ஸ் பொங்கல்

ட்ரை ஃப்ரூட்ஸ் பொங்கல்

ட்ரை ஃப்ரூட்ஸ் பொங்கல்

 

தேவையானவை:

 

பச்சரிசி - ஒரு கப்

பாசிப் பருப்பு - அரை கப்

சுண்டக் காய்ச்சிய பால் - ஒரு கப் 

நெய் - கால் கப்

சர்க்கரை - ஒரு கப்

வறுத்த பாதாம், முந்திரி - ஒரு டேபிள் ஸ்பூன்

திராட்சை - 25 கிராம்

வால்நட் -5 கிராம்

ஏலக்காய் - சிறிதளவு

குங்குமப்பூ - சிறிதளவு

செர்ரி பழம் - 10

 

செய்முறை:

 

வெறும் வாணலியில் பாசிப் பருப்பைச் சேர்த்து வாசம் வரும் வரை வறுத்து அரிசியோடு சேர்த்துக் கழுவி... குக்கரில் போட்டு 4 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து 3 விசில்கள் வரும் வரை வேக வைக்கவும். வெந்ததும் மூடியைத் திறந்து பொங்கலில் பால், சர்க்கரை சேர்த்துக் கிளறவும். இதில் நெய்யில் வறுத்த ஏலக்காய், குங்குமப்பூ, வறுத்த பாதாம் முந்திரி, திராட்சை, செர்ரி, வால்நட் சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும்.

 

 

No comments:

Post a Comment