Wednesday, 5 October 2016

பீட்ரூட் மினி பொடி இட்லி

பீட்ரூட் மினி பொடி இட்லி

பீட்ரூட் மினி பொடி இட்லி

 

தேவையானவை:

 

சிறிய பீட்ரூட் - 1 (தோல் நீக்கி பொடியாக நறுக்கவும்)

ஆலிவ் ஆயில் - அரை டேபிள்ஸ்பூன்

உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு

 

பொடி இட்லி செய்ய:

 

இட்லி மாவு - 300 மில்லி

இட்லி மிளகாய் பொடி - 3 டேபிள்ஸ்பூன்

 

தாளிக்க:

 

எண்ணெய் - 3 டீஸ்பூன்

கடுகு - கால் டீஸ்பூன்

உளுந்து - கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

 

செய்முறை:

 

அடுப்பில் எண்ணெய் சட்டியை வைத்து அரை டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் பீட்ரூட் சேர்த்து மூன்று நான்கு நிமிடம் மிதமான தீயில் வதக்கி உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும். பீட்ரூட் வெந்ததும், ஆறவிட்டு மிக்ஸியில் சேர்த்து பேஸ்டாக அரைத்து வைக்கவும். இதை இட்லி மாவில் கலந்து சிறிய இட்லித் தட்டுகளில் மாவை ஊற்றி, இட்லியாக வேக வைத்தெடுத்து ஆற விடவும். அடுப்பில் எண்ணெய் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிக்க வேண்டியதைச் சேர்த்துத் தாளித்து இட்லி மிளகாய்ப்பொடியைச் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் இட்லிகளைச் சேர்த்து பொடி நன்றாக இட்லியில் ஒட்டும் வரை வதக்கி, அப்படியே பரிமாறலாம். அல்லது லஞ்சுக்குக் கொடுத்தனுப்பலாம். பிள்ளைகளைச் சாப்பிட வைக்கும் இட்லி இது.

 

No comments:

Post a Comment