Wednesday, 5 October 2016

ஹல்வா பூரி சோலே

ஹல்வா பூரி சோலே


ஹல்வா பூரி சோலே

 

தேவையானவை:

 

ரவை - 250 கிராம்

சர்க்கரை - 250 கிராம்

நெய் - 2-3 டேபிள்ஸ்பூன்

காய்ச்சிய பால் - 500 கிராம்

ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை

முந்திரி, பாதாம், பிஸ்தா, திராட்சைப்பழம் (கிஸ்மிஸ்பழம்) - சிறிதளவு (பொடியாக நறுக்கவும்)

பூசணி விதைகள் - அலங்கரிக்க‌

 

அல்வா செய்முறை:

 

அடுப்பில் வாணலியை வைத்து, நெய் ஊற்றி பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம், பிஸ்தா, திராட்சைப்பழம் (கிஸ்மிஸ்) சேர்து வதக்கி தனியாக வைக்கவும். இதே வாணலியில் ரவை சேர்த்து குறைந்த தீயில் நிறம் மாறும் அளவுக்கு வறுக்கவும். நல்ல வாசனை வரும் போது, பால் சேர்த்துக் கலக்கிக் கொண்டே, ஃபுட் கலரை சேர்த்துக் கலக்கவும். கெட்டியானதும் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும், சர்க்கரை கரைந்து அல்வா ஒட்டாமல் வரும்போது அடுப்பை அணைத்து பூசணி விதைகள் தூவி, தனியாக ஒரு பவுலில் எடுத்துவைத்துப் பரிமாறவும்.

 

பூரி செய்ய‌ தேவையானவை:

 

கோதுமை மாவு - 250 கிராம்

உப்பு, தண்ணீர் - தேவையான அளவு

எண்ணெய் - பொரிக்க‌

 

செய்முறை:

 

வாய் அகன்ற ஒரு பாத்திரத்தில் மாவு, உப்பு கலந்து சிறிது சிறிதாக தண்ணீரைச் சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசையவும். இதை சிறிய உருண்டைகளாகப் பிரித்து உருட்டி தேய்த்து எண்ணெயில் பூரிகளாகச் சுட்டெடுக்கவும்.

 

சோலே செய்ய‌ தேவையானவை:


கொண்டைக்கடலை - 500 கிராம் (ஊற வைத்து உப்புப் போட்டு வேக வைக்கவும்)

எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்

பட்டை - ஒரு துண்டு

கிராம்பு - 2

ஏலக்காய் - 2

பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு

இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

பெரிய வெங்காயம் - 1  (ஸ்லைஸ்களாக நறுக்கியது)

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2

சீரகம் - அரை டீஸ்பூன்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) - 1 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - அலங்கரிக்க‌

உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

 

அடுப்பில் வாணலியை வைத்து, ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய், வெங்காயம், சேர்த்து நிறம் மாற வதக்கவும். இதில் தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்கவும். அடுப்பை அணைத்து ஆறவிட்டு, கலவையை மிக்ஸியில் சேர்த்து அரைத்து வைக்கவும். இனி அடுப்பில் வாணலியை வைத்து மீதம் இருக்கும் எண்ணெயை ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து பொரிய விடவும்.  இதில் இஞ்சி-பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக சில நிமிடம் வதக்கவும். இதில் அரைத்து வைத்திருக்கும் வெங்காயக் கலவையைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), உப்பு, சீரகம் சேர்த்து நன்கு கலக்கி தீயை சிம்மில் வைத்து கொதிக்க விடவும். கிரேவியின் பச்சை வாசனை போனதும் வெந்த கொண்டைக்கடலையைச் சேர்த்து ஐந்து நிமிடம் சிம்மில் கொதிக்க விட்டு எண்ணெய் பிரிந்து வந்ததும், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும். வட இந்தியாவில் இந்த இரண்டு சைட் டிஷ்கள்தான் பூரிக்கு மிக பிரபலம்.

No comments:

Post a Comment