மூங்கில் அரிசி ஓமப்பொடி
மூங்கில் அரிசி ஓமப்பொடி
தேவையானவை:
மூங்கில் அரிசி மாவு - 1 கப்
கடலை மாவு - 4 டேபிள்ஸ்பூன்
பச்சரிசி மாவு - 4 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ஓமம் - 1 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தேவையானவற்றில் கொடுத்துள்ள பொருட்களில் எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும். இத்துடன் தேவையான அளவு நீர் சேர்த்து மாவை பிசையவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி மாவை ஓமப்பொடி அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து, பொரித்து எடுத்தால் ஓமப்பொடி ரெடி.
குறிப்பு:
மூங்கில் அரிசி மாவு, கவுனி அரிசி மாவு, மற்றும் மாப்பிள்ளை சம்பா அரிசி மாவு தயாரிக்க... அரிசிகளை 4 மணி நேரம் ஊறவிடவும். பிறகு நீரை வடித்துவிட்டு நிழலில் உலர்த்தி மிஷினில் கொடுத்து அரைத்துக்கொள்ளவும்.

No comments:
Post a Comment