ஓம சாதம்
ஓம சாதம்
தேவையானவை:
வடித்த சாதம் - ஒரு கப்
ஓமம் - ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
பெருங்காயம் - சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
காய்ந்த வேப்பம் பூ - 2 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
பூண்டு - 3 பற்கள்
செய்முறை:
ஓமம், மிளகு இரண்டையும் வெறும் வாணலியில் லேசாக வறுத்து மிக்ஸியில் கரகரப்பாகப் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு பூண்டு நசுக்கிப் போட்டு வதக்கி, கறிவேப்பிலை, பெருங்காயம் இரண்டையும் இத்துடன் சேர்த்து வதக்கி, வேப்பம் பூ, உப்பு சேர்த்து வதக்கவும். பொடித்த ஓமம், மிளகுப் பொடி ஆகியவற்றைத் தூவி இறக்கி, சாதத்தில் சேர்த்துக் கலக்கவும். இதுவே ஓம சாதம்.
தீர்வு:
இந்த ஓம சாதத்தைச் சாப்பிட்டால் வயிற்றுப்பூச்சிகள் ஒழிவதுடன், ஜீரணசக்தி ஏற்படும், வயிற்றுப் பொருமல் நீங்கும்.

No comments:
Post a Comment