பேர்ட்ஸ் நெஸ்ட்
பேர்ட்ஸ் நெஸ்ட்
தேவையானவை:
உருளைக்கிழங்கு - ஒரு கிலோ
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)
இஞ்சி - ஒரு துண்டு (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)
பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)
சீரகம் - ஒரு டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மாங்காய்த்தூள் - ஒரு ஸ்பூன் (விருப்பப்பட்டால்)
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
மேலே தடவ:
மைதா - அரை கப் (ஒரு கப் தண்ணீர் விட்டு பேஸ்ட்டாக கரைத்துக்கொள்ளவும்).
மேலே புரட்டுவதற்கு:
லேசாக வறுத்த சேமியா - 100 கிராம்
உள்ளே ஸ்டஃப் செய்ய:
உப்பு சேர்த்து வேகவைத்த பட்டாணி - ஒரு கப்
அலங்கரிக்க:
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து மசித்துக் கொள்ளவும். இத்துடன் உப்பு, மஞ்சள்த்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் நறுக்கிய கொத்தமல்லித்தழை இவையனைத்தையும் சேர்த்து மசித்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் தாளித்து நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி எடுத்து, இதை உருளைக்கிழங்கு மசாலாக் கலவையுடன் சேர்த்துக் கலந்து நன்றாகப் பிசைந்து பிறகு சிறு சிறு உருண்டைகளாகப் பிரித்துக் கொள்ளவும்.
இந்த உருண்டைகளுக்குள் வேகவைத்தபட்டாணியை சுமார் அரை ஸ்பூன் வைத்து ஸ்டஃப் செய்து மூடவும். பிறகு, தயாராக உள்ள மைதா பேஸ்டில் தோய்த்து எடுத்து வறுத்த சேமியாவில் புரட்டி எடுக்கவும். இவ்வாறு எல்லா உருண்டைகளையும் ஸ்டஃபிங் செய்து முடிக்கவும். இதை நெஸ்ட் (கூடு) என்று அழைக்கிறார்கள்.
கடாயில் எண்ணெயைக் காய வைத்து, ஒவ்வொன்றாகப் பொரித்தெடுக்கவும். பொன்னிறமாக இருக்க வேண்டும். பொரித்த கூடுகளின் நடுவில் கீறி, பட்டாணி வெளியில் தெரியுமாறு வைத்து, கறிவேப்பிலை கொத்தமல்லித்தழை கொண்டு அலங்கரித்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

No comments:
Post a Comment