Sunday, 2 October 2016

கறிவேப்பிலைக் குழம்பு

கறிவேப்பிலைக் குழம்பு

கறிவேப்பிலைக் குழம்பு

 

தேவையானவை:

கறிவேப்பிலை - ஒரு கப்  (இலைகளை உருவி சுத்தம் செய்துகொள்ளவும்)

பச்சைமிளகாய் - 1

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 2

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

சுக்குத்தூள் - ஒரு சிட்டிகை

உப்பு - தேவையான அளவு

சமையல் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்

கடுகு - ஒரு டீஸ்பூன்

நல்லெண்ணெய்  - ஒரு டீஸ்பூன்

 

செய்முறை:

முதலில் தக்காளியை சுடுநீரில் போட்டு எடுத்து தோலை நீக்கி விட்டு பெரிய வெங்காயம், பச்சைமிளகாய் இவற்றுடன் சேர்த்து நைஸாக அரைக்கவும். வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலையை நன்றாக வதக்கி, நீர்விட்டு அரைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், சுக்குத்தூள் தாளித்து அரைத்த கறிவேப்பிலை, தக்காளி-வெங்காய விழுது, மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். இரண்டு மூன்று கொதி வந்ததுமே இறக்கி விடவும்.

 

தீர்வு:

தலைமுடி வளர்ச்சிக்கும், கண்பார்வைக்கும் உதவுவதுடன் வயிற்றுப் பிரட்டல், மலச்சிக்கல் இவற்றை நீக்கும்.

 

No comments:

Post a Comment