சாமை பயத்தம் பருப்பு முறுக்கு
சாமை பயத்தம் பருப்பு முறுக்கு
தேவையானவை:
சாமை மாவு - 200 கிராம்
அரிசி மாவு - 100 கிராம்
பயத்தம் பருப்பு - 100 கிராம்
பொட்டுக்கடலை - 25 கிராம்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
சூடான எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
இளம் சூடான தண்ணீர் - மாவு பிசைய
செய்முறை:
அடுப்பில் கடாயை வைத்து பயத்தம் பருப்பைச் சேர்த்து சில நிமிடம் வறுத்து ஆற விடவும். இதை மிக்ஸியில் சேர்த்து பொடியாக்கி வைக்கவும். பொட்டுக்கடலையையும் மிக்ஸியில் சேர்த்து பொடியாக்கி வைக்கவும். அரிசி மற்றும் சாமை மாவை கடாயில் வாசனை வரும் வரை தனித்தனியாக வறுத்து ஆற வைக்கவும். இனி இந்த இரண்டு மாவையும் ஒன்றாகக் கலந்து இத்துடன் சிறு பருப்புப்பொடி, பொட்டுக்கடலைபொடி, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், வெண்ணெய் சேர்த்துக் கலக்கவும். தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து மாவு பிசையவும். இதில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றிப் பிசையவும். மாவை மிருதுவாகப் பிசைந்து பத்து நிமிடம் மூடி போட்டு வைக்கவும். அச்சில் மாவைச் சேர்த்து பொரிக்க பயன்படுத்தும் கரண்டியின் பின்புறம் முறுக்காக பிழிந்து எண்ணெயில் இடவும். இருபுறமும் வேக வைத்து எடுத்துப் பரிமாறலாம்.
No comments:
Post a Comment