வெஜிடபிள் ஜால்ப்ரைசி
வெஜிடபிள் ஜால்ப்ரைசி
தேவையானவை:
சீரகம் 1 டீஸ்பூன்
வெண்ணெய் 25 கிராம்
பெரிய வெங்காயம் ஒன்றில் பாதி (நீளமாக நறுக்கவும்)
கேரட் 25 கிராம் (நீளமாக நறுக்கவும்)
பீன்ஸ் 25 கிராம் (நீளமாக நறுக்கவும்)
உருளைக்கிழங்கு 1 (நீளமாக நறுக்கவும்)
காலிஃப்ளவர் ஒரு பூவில் உள்ள 4 சிறிய பூக்கள் (நீளமாக நறுக்கவும்)
கேப்ஸிகம் ஒன்றில் பாதி (நீளமாக நறுக்கவும்)
இஞ்சி 10 கிராம் (நீளமாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் 1 (நீளமாக நறுக்கவும்)
இஞ்சிபூண்டு பேஸ்ட் 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்)
அரை டீஸ்பூன்
சீரகத்தூள் கால் டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் கால் டீஸ்பூன்
பெங்களூர் தக்காளி 1 (சதைப்பகுதியை மட்டும் நீளமாக நறுக்கவும்)
உப்பு தேவையான அளவு
எலுமிச்சைப்பழம் அரைப்பழம் (சாறு எடுத்துக்கொள்ளவும்)
கசூரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) 1 டீஸ்பூன்
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து வெண்ணெய், சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, வெங்காயம், இஞ்சிபூண்டு பேஸ்ட், கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும். இதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள் , சீரகத்தூள் சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கி மூடி போட்டு நான்கு நிமிடம் வேக விடவும். காய்கறிகள் வெந்ததும் நறுக்கிய கேப்ஸிகம், எலுமிச்சைச்சாறு, தக்காளி, உப்பு சேர்த்து ஒரு புரட்டு புரட்டி கசூரி மேத்தி தூவி இறக்கவும்.

No comments:
Post a Comment