லச்ச பராத்தா
லச்ச பராத்தா
தேவையானவை:
கோதுமை மாவு அரை கிலோ
எண்ணெய் 50 மில்லி
உப்பு தேவையான அளவு
இளஞ்சூடான தண்ணீர் தேவையான அளவு
செய்முறை:
வாய் அகன்ற பாத்திரத்தில் மாவு, உப்பு, இளஞ்சூடான தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவது போல பிசைந்து பதினைந்து நிமிடம் ஊற விடவும். சப்பாத்திக்கு மாவு எடுப்பதை விட கொஞ்சம் கூடுதலாக மாவை எடுத்து வட்டமாகத் தட்டவும். தட்டிய மாவின் ஒரு புறத்தில் மட்டும் கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு மெலிதாக தேய்க்கவும். தேய்த்ததை கடைகளில் பரோட்டா மாவை வட்டமாக சுற்றி வைப்பது போல சுற்றி வைக்கவும். இதன் மேல் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அப்படியே பூரிக்கட்டையால் வட்டமாகத் தேய்க்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அரை டிஸ்பூன் எண்ணெய் விட்டு, இரண்டு புறமும் வேகவைத்து சுற்றிலும் எண்ணெய் விட்டு எடுத்துப் பரிமாறவும்.

No comments:
Post a Comment