முட்டைகோஸ் ரைஸ்
முட்டைகோஸ் ரைஸ்
தேவையானவை:
வடித்த சாதம் - 400 கிராம்
முட்டைகோஸ் - 300 கிராம் (நீளமாக நறுக்கிக் கொள்ளவும்)
மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் - 1 (ஸ்லைஸ்களாக நறுக்கவும்)
கேரட் - 1 (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் - 3 (உடைத்துக் கொள்ளவும்)
கறிவேப்பிலை - சிறிதளவு
எலுமிச்சைச் சாறு - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2-3
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 7
செய்முறை:
சாதத்தை ஆற விடவும். அடுப்பில் எண்ணெய் சட்டியை வைத்து தாளிக்கக் கொடுத்தவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து பொன்னிறமாகத் தாளிக்கவும். இதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கி கேரட் சேர்த்து வேகும் வரை மிதமான தீயில் வதக்கவும். இதில் முட்டைகோஸ், மஞ்சள்தூள் சேர்த்து மிதமான தீயில் வேகும் வரை வதக்கவும். இதில் வெந்த சாதம், உப்பு சேர்த்து குறைந்த தீயில் சிறிது நேரம் வதக்கி, இறுதியாக கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, எலுமிச்சைச் சாறு, சேர்த்து கிளறி அடுப்பை அணைத்துப் பரிமாறவும்.

No comments:
Post a Comment